பரவும் டெங்கு காய்ச்சல்..பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை.!!
டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். இது 'ஏடிஸ்' கொசுக்களின் கடி மூலம் பரவுகிறது.
அறிகுறிகள்: கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, வயிற்று வலி, சோர்வு மற்றும் உடல் பலவீனம் அடைதல் ஆகியவை.
தடுப்பு முறைகள் :டெங்கு பரவும் காலங்களில் கொசுக்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டிற்குள் கொசு வலைகள் மற்றும் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
டெங்கு கொசுக்கள் முட்டை இடுவதைத் தடுக்க, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் நீரை அகற்ற வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு மருந்துகள் இல்லை. இது பொதுவாக தானாகவே சரியாகிவிடும் அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்