ஒரு மாதம் மைதாவை தவிர்ப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

credit: freepik
ருசியான பரோட்டா முதல் பலதரப்பட்ட பேக்கரி பலகாரங்கள் வரை மைதாவில் தயாராகின்றன. இந்த மாவை ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
credit: freepik
எடை குறையும்: சுத்திகரிக்கப்பட்ட இந்த மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்துவிடும். பசியை தூண்டாமல் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.
credit: freepik
செரிமான ஆரோக்கியம்: முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது மைதாவில் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ இல்லை. செரிமான அமைப்பை பராமரிக்க அவை அவசியம். மைதாவை தவிர்ப்பதன் மூலம் குடல் நலனை பேணலாம்.
credit: freepik
நாள்பட்ட நோய்களை குறைக்கலாம்: மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் டைப்- 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களுடன் தொடர்புடையவை.
credit: freepik
சருமம் பொலிவாகும்: மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கும் வித்திடும். மைதாவை தவிர்ப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்
credit: freepik
மனநிலை மேம்படும்: இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு மனநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிடும். அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதிக்கும்.
credit: freepik
நோய் எதிர்ப்பு செயல்பாடு: உணவில் அதிக முழு தானியங்களை சேர்ப்பதன் மூலமும், மைதாவை தவிர்ப்பதன் மூலமும், நோய்த்தொற்றுகளை தடுக்கலாம். முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின்கள் பி, ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
credit: freepik
Explore