உங்களுக்காக.. பயனுள்ள சமையல் டிப்ஸ்..!

metaAI
கிழங்குகளை உப்புப்போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது.
metaAI
பலகாரம் செய்ய எண்ணெயை கொதிக்க வைக்கும்போது சிறிது இஞ்சியை அம்மியில் அல்லது மிக்சியில் நசுக்கிப் போட்டு உபயோகித்தால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது.
metaAI
வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.
தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
metaAI
முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்நிறமாக வறுத்து மோர் குழம்பில் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும், வாசம் சூப்பராக இருக்கும்.
மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.
metaAI
கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும.
metaAI
Explore