மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி..?

freepik
உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிக்கப்படும். அதனால் உடல் நலம் மட்டுமல்லாமல் மனநலம் குறித்தும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
freepik
மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என்ற வினாவிற்கு மனநல மருத்துவர்கள் பல்வேறு எளிய வழிகளை பரிந்துரை செய்துள்ளார்கள். அது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பது அவசியம். அத்துடன் காலை உணவை தவிர்ப்பது கூடாது. நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம்.
freepik
உறக்கம் என்பது குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை இருப்பது மிகவும் நல்லது. ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக உறங்கும் பொழுது மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.
metaAI
படுக்கை அறையில் பிரகாசமான கண்கூச வைக்கும் விளக்குகள் ஒளிர்வது கூடாது. மென்மையான ஒளிதரும் விளக்குகளை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் உறக்கத்திற்கு ஏற்ற மெலடோனின் சுரப்பு கூடுதலாகி உடனடியாக தூக்கம் வரும்.
metaAI
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எல்லா விஷயங்களுக்கும் போட்டிபோடும் மனப்பான்மையை தவிர்ப்பது நல்லது. விவாதங்களில் விட்டுக் கொடுப்பவராக இருப்பது நல்லது.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட திறமைகளோடு பிறந்து வளர்ந்து இருப்பார்கள். அதேபோல அவரவருக்கு உள்ள தனித்திறமைகளை பயன்படுத்தி படிப்பு, விளையாட்டு, கலை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு தங்களுடைய தொடர்பு எல்லைகளை அதிகரித்துக் கொண்டால் மனதிற்கு அது உறுதி தரும் செயலாக அமையும்.
அன்றாட வேலைகளாக இருந்தாலும் எந்திரத்தனமான பணிகளையே தினமும் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் மூளை மற்றும் மனம் ஆகியவை சோர்வடைந்து விடும். ஆகவே குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியான பணிகளுக்கு இடையில் விடுப்பு எடுத்து அருகில் உள்ள ஊருக்காவது சுற்றுலா செல்வது மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
metaAI
Explore