சத்து நிறைந்த புடலங்காய் கூட்டு செய்வது எப்படி?

புடலங்காயை கூட்டு செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு, புடலங்காய், காய்ச்சிய பால், மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவைக்கு கடுகு, சீரகம் - சிறிதளவு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெ.வெங்காயம், நெய், கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புடலங்காயை வட்ட வடிவத்தில் சிறிய துண்டுகளாக நறுக்குங்கள்.
கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை வேக வையுங்கள்.
அதனுடன் புடலங்காய், வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.
புடலங்காய் நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவைத்துவிட்டு காய்ச்சிய பாலை ஊற்றி கிளறுங்கள்.
பின்னர் வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டு கலவையில் கலந்து பரிமாறுங்கள். சூப்பரான புடலங்காய் கூட்டு ரெடி.
ExploreExplore