உடலில் சில வைட்டமின்கள் குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்கள் குறைபாட்டை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம்.
credit: freepik
வைட்டமின் டி: தலை முடி வேர்களை வலுப்படுத்துவதிலும், புதிய முடியை வளரச் செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது; மீன், முட்டை, பால், தயிர் போன்ற உணவுப்பொருட்களில் வைட்டமி டி அதிகம் காணப்படுகிறது.
credit: freepik
வைட்டமின் ஈ: வைட்டமி ஈ ஒரு ஆக்சிஜனேற்றியாகும். இது முடியை பிரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. பாதாம், வெண்ணெய் மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது.
Photo: MetaAI
வைட்டமின் சி: இது தலைமுடியை வலுப்படுத்த தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமிம் சி உள்ளது.
Photo: MetaAI
பயோட்டின்: இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது முடியை வலுப்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது; முட்டை, கொட்டை வகைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் பயோட்டி நிறைந்த உணவுகள் ஆகும்.
Photo: MetaAI
இரும்புச்சத்து: முடி வளர்ச்சிக்கு அவசியமான ஆக்சிஜனை உடல் பாகங்களுக்கு கொண்டு செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. பசலைக் கீரை, பீட்ருட் மற்றும் சிவப்பு இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
Photo: MetaAI
இந்த வைட்டமின்களை உணவு மூலம் பெறுவதை விட மருத்துவர் அளிக்கும் ஆலோசனையின் பேரில் மருந்துகள் மூலமும் வைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.