சிவபெருமானை வழிபடும் பலருக்கும் கயிலாயமலை எவ்வளவு உன்னதான பிரதேசம் என்பது தெரியும். ஆன்மிக ரீதியாக வழிபாட்டுக்குரிய மலையாகவும், சிவபெருமானின் வசிப்பிடமாகவும் இந்த மலை பார்க்கப்படுகிறது.
கயிலாய மலை இமயமலைத் தொடரில் அமைந்திருக்கிறது. சீனாவின் ஒரு பகுதியாகத் திகழும் நிபெத்தில் இருக்கும் இந்த மலை, சுமார் 6,638 மீட்டர் உயரம் கொண்டது. சிவபெருமான் வசிக்கும் இடமாகவும், சொர்க்கத்திற்கு இணையான பூலோக பகுதியாகவும் இதனை பக்தர்கள் கருதுகின்றனர்.
பசுபதிநாதர் கோவில்: காத்மாண்டுவில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவபெருமானுக்காக அமைந்த இந்த கோவில், தியோபட்டன் நகரின் மையத்தில், பாக்மதி ஆற்றின் கரையில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது.
ஓம் பர்வதம்: இந்திய-நேபாள எல்லையில் வடகிழக்கு இமய மலையில், 6,191 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது ஓம் பர்வதம் மலைச்சிகரம். இந்த மலையின் மீது படர்ந்திருக்கும் பனியானது. 'ஓம்' என்ற எழுத்து வடிவில் பரவியிருக்கும்.
எம துவாரம் :எமதர்மராஜனின் சுதவு என்று பொருள்படும் இந்த இடம், கயிலாய மலை - மானசரோவர் ஏரி யாத்திரைப் பாதையில் முக்கியமான ஒரு இடமாகும். கயிலாயமலையை சுற்றி வலம் வரத் தொடங்குவதற்கு முன்பு, இந்த கதவின் வழியாகச் சென்று வர வேண்டும்.
ஜல் நாராயணன் விஷ்ணு கோவில்: காத்மாண்டு மாவட்டம் பூதநீலகண்டம் என்ற ஊரில் உள்ள ஆலயம் இது. கயிலாய மலையின் அடிவாரத்தில் இது இருக்கிறது. இங்கே சயன கோலத்தில் நீருக்கு மேல் மிதந்த நிலையில் விஷ்ணு சிலை காணப்படுகிறது. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.
முக்திநாத் கோவில்: இமயமலையின் மீது 3,610 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, இந்துக்கலின் தமான இடமாக முத்திதாத் கருதப்படுகிறது. நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
கவுரி குண்டம் :இமயமலையின் மீது 6,520அடி உயரத்தில் 'கவுரி குண்டம்' என்ற ஏரி இருக்கிறது. கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த இடமும், புனித யாத்திரை தலத்தில் ஒன்று.