ஒரு நாள் சுற்றுலா... புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள்..!
புதுச்சேரியில் அழகிய கடற்கரைகள், பிரெஞ்சு கலைநயம் மிக்க கட்டிடக் கலைகள், வரலாற்று இடங்கள், நேர்த்தியான தெருக்கள் என சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. ஒரு நாள் கிடைத்தால் எந்த இடங்களை எல்லாம் நாம் காண முடியும் என்பதை பார்க்கலாம்.
பிரஞ்சு காலனி :பிரஞ்சு காலனி கண்களுக்கு விருந்தாகவும், இன்பமாகவும் இருக்கிறது. சுத்தமான சாலைகள், அழகான கடற்கரை, நீளமான தென்னை மரங்கள், சுற்றிலும் பூக்களின் அழகு என நம்மை ஈர்க்கின்றன.
ராக் பீச் :புதுச்சேரியின் முதன்மையான கடற்கரைகளில் ஒன்றாக ராக் பீச் உள்ளது. இந்த கடற்கரையில் மாலை வேளையில் மக்கள் அதிகம் கூடுவதால் உற்சாகமாக இருக்கும். இங்கு புதிய கடல் உணவு வகைகளை உண்டு மகிழலாம்.
பாண்டிச்சேரி அருங்காட்சியகம்: இங்கு பல வரலாற்று சின்னங்கள் உள்ளதால் வரலாற்று பொக்கிஷமாக விளங்குகிறது. இங்கு பல்லவ சிற்பங்கள், ரோமானிய நாணயங்கள், மண்பாண்டங்கள் , தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உள்ளன.
பாரதியார் இல்லம் :புதுச்சேரியில் பாரதியார் இல்லத்தை பார்க்க தினமும் ஏரளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர் வசித்த வீட்டை அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சண்டே மார்க்கெட்: புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் மிகவும் பிரபலமானது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கடைகள் போடப்பட்டு இருக்கும். அனைத்து வகையான பொருட்களும் குறைவான விலையில் கிடைக்கும்.
பாரடைஸ் பீச்: ரம்மியமான தீவு போல் காட்சியளிக்கும் பாரடைஸ் பீச்சை சுண்ணாம்பாற்றில் படகு பயணம் செய்து அடையலாம். இந்த இடம் பார்க்கும்போதே வெளிநாட்டில் இருப்பதை போன்ற உணர்வை உங்களுக்கு தரும். சாகசப் பிரியர்களுக்கான நீர் விளையாட்டுகள் இங்குள்ளன.