சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கிய தமிழகம்..முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா?

Photo: wikipedia
மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகள் வருகையை உள்நாடு, வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா சென்றுள்ளனர்.
Photo: wikipedia
உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் 64.68 கோடி பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
Photo: wikipedia
அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழக்கம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
Photo: wikipedia
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்த்துள்ளது.
Photo: wikipedia
மேலும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை தமிழகம் கவர்த்துள்ளது.
Photo: wikipedia
காசி விசுவநாதர் கோவில், அயோத்தி ராமர் கோவில் ஆகிய ஆன்மிக தலங்களை பார்வையிட உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
Photo: wikipedia
கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது.
Photo: wikipedia
4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளுடன் ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளுடன் ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
Photo: wikipedia
Explore