இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவுகள்..முதலிடத்தில் எது தெரியுமா?

Photo: wikipedia
1. இட்லி: 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் முதன்மையானது, இட்லிதான். இட்லி தென்னிந்தியாவின் மிகவும் பிரபல மான ஒரு உணவாகும்.
Photo: wikipedia
2. போர்ன்ஸ்டார் மார்டினி: 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இரண்டாவது உணவுதான், போர்ன்ஸ்டார் மார்டினி. இது வோட்கா பேஷன் புரூட், எலுமிச்சைச் சாறு, சிம்பிள் சிரப் ஆகியவற்றைக் கொண்டு தயா ரிக்கப்படும் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையில் இருக்கும் பானம்.
Photo: wikipedia
3. மோதகம்: மூன்றாவது இடத்தில பாரம்பரிய இனிப்பு பலகாரமான இது மராட்டியம், கோவா மற்றும் தென்னிந்தியாவில் பிரபலமானது. இது பொதுவாக விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்கு படைக்க தயாரிக்கப்படும் இனிப்பாகும்.
Photo: wikipedia
4. தேகுவா: கூகுளில் 4-வதாக அதிகம் தேடப்பட்ட உணவு தான் தேகுவா. இது பீகார், ஜார்கண்ட் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச பகுதிகளில் பிரபலமான பாரம்பரிய இனிப்பாகும். துமை மாவு, வெல்லம், நெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட் போன்ற இது, நீண்ட நாள் வைத்து சாப்பிட ஏற்றது.
Photo: wikipedia
5. உகாதி பச்சடி: 5-வது உணவு இடத்தில் உகாதி பச்சடி உள்ளது. இது ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பிரபலமானது. அறுசுவை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படக்கூடிய பச்சடியான இது, வெவ்வேறு சுவையையும், வெவ்வேறு உணர்ச்சிகளையும், வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும் குறிக்கும்.
Photo: wikipedia
6. பீட்ரூட் கஞ்சி: கூகுளில் 6வது அதிகம் தேடப்பட்ட உணவுதான், பீட்ரூட் கஞ்சி. இது பீட்ரூட், கடுகு, கருப்பு கேரட், உப்பு மற்றும் நீர் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய வட இந்திய பானமாகும்.இது செரிமானத்திற்கு உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
Photo: wikipedia
7. திருவாதிரை களி: இது தமிழ்நாட்டில் திருவாதிரை பண்டிகையின்போது தயாரிக்கப்படுகிறது. இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும்.
8. யார்க்ஷயர் புட்டிங்: இங்கிலாந்து உணவான யார்க்ஷயர் புட்டிங், முட்டை, மைதா, பால் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பப்ஸ் போன்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வீடுகளில் அதிகம் தயாரிக்கப்படுவதால், இதன் தேடல் அதிகரித்துள்ளது.
Photo: wikipedia
9. கோண்ட் கதிரா: இது வட இந்தியாவில் கோடைகாலங்களில் உடலை குளிர்ச்சியாக்க உட்கொள்ளப்படும் ஒரு பானமாகும். ஆயுர்வேதத்தின்படி இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே கோடைகாலங்களில் இதன் தேடல் கூகுளில் அதிகரித்துள்ளது.
Photo: Gemini AI
10. கொழுக்கட்டை: கடைசியாக 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10-வது உணவுதான் கொழுக்கட்டை. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இது ஆவியில் வேக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும்.
Explore