வெளிநாட்டு சுற்றுலாவுக்கு எங்கு போகலாம்?

உலகில் கண்டிப்பாக சுற்றிப் பார்க்க வேண்டிய நாடுகளை இதில் பார்க்கலாம்.
இது பழமையும், புதுமையும் கலந்த நாடாக திகழ்கிறது. சாகுரா மலர்கள், அனிமி கலாசாரம், ஹை-டெக் நகரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

ஜப்பான் 🇯🇵

இது துருவ ஒளி(ஆரோரா) அதிகளவு தென்படும் நாடாகும். இங்கு பனிமலைகள் மற்றும் எரிமலைகள் இருப்பதால் சாகச விரும்பிகளுக்கு சொர்க்கமாக திகழ்கிறது.

ஐஸ்லாந்து 🇮🇸

இங்கு சென்றால் ரோமின் பழமையான வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். வெனிஸ் கால்வாய் மற்றும் அமல்பி கடற்கரை உங்களின் கண்களுக்கு விருந்தளிக்கும்.

இத்தாலி 🇮🇹

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம் இங்குள்ளது. சுவாரஸ்யமான பாலைவன சாகசங்கள் மேற்கொண்டால் இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை காணலாம்.

மொராக்கோ 🇲🇦

தீவு நாடான இங்கு உலகின் அழகான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இது கங்காருகளின் தாயகமாக விளங்குகிறது.

ஆஸ்திரேலியா 🇦🇺

சான்டோரினியின் சுத்தமான கடற்கரையில் உள்ள நீல-வெள்ளை வீடுகள், உங்கள் கண்களை கொள்ளையடிக்கும்.

கிரீஸ் 🇬🇷

இங்கு வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. திறந்தவெளி ஜீப்பில் சென்று அவைகளை பார்க்கும் அனுபவம் தனித்துவமானது.

தென் ஆப்பிரிக்கா 🇿🇦

Explore