3-வது டி20: இலங்கையை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

சாம் கர்ரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3-வது டி20:  இலங்கையை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
Published on

பல்லேகலே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில், இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங் தேர்வு செய்ததும் அந்த அணி முதலில் விளையாடியது. ஆனால், தொடக்கம் முதலே ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது.

எனினும், சாம் கர்ரன் நிலைத்து ஆடி 58 ரன்களை சேர்த்ததில், அணி மொத்தம் 128 ரன்களை சேர்க்க உதவியாக இருந்தது. இதனை தொடர்ந்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியிலும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இதனால், போட்டியில், இலங்கையை 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி வெற்றி பெற்றது. சாம் கர்ரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்பே, 2-0 என முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணி இந்த போட்டியையும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com