

பல்லேகலே,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி முயற்சிக்கும்.