அபிஷேக் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் அல்ல; பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கருத்து

கொழும்புவில் நாளை மறுதினம் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன.
அபிஷேக் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் அல்ல; பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கருத்து
Published on

இஸ்லாமாபாத்,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை மறுதினம் நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் அல்ல என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் டிவி சேனலில் நடந்த கிரிக்கெட் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் முகமது அமீர் பேசியதாவது,

அபிஷேக் சர்மா எந்தவித கட்டுப்பாடுமின்றி பந்தை வேகமாக அடிக்கக்கூடியவர். அவர் அனைத்து பந்தையும் அடிக்க நினைக்கிறார். அவரின் பேட்டில் பந்து பட்டால் அவர் ரன் எடுக்கிறார்.

ஆனால், அவர் விரைவில் அவுட் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. அவர் 8 ஆட்டங்களில் விளையாடினால் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் அடிக்கிறார். எஞ்சிய ஆட்டங்களில் 10, 15, 20, 0 போன்ற ரன்களை அடிக்கிறார். அவர் களத்தில் நேராக நின்றுகொண்டு கட்டுப்பாடின்றி பந்தை அடிக்கிறார்.

கிரிக்கெட் நுட்ப ரீதியில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் அல்ல என்பது என் கருத்து. அவர் அதிக ஆபத்தான கிரிக்கெட்டை ஆடுகிறார். அவருக்கு டீப் கவரில் (பவுண்டரி லைன் அருகே) பீல்டரை நிறுத்திவிட்டு அவரின் உடம்பை குறிவைத்து பவுன்சர் பந்தை வீச வேண்டும். அவ்வாறு வீசினால் அவரின் விக்கெட்டை எளிதில் வீழ்த்த முடியும். பந்தை மெதுவாக (ஸ்லோவர் பந்து) வீசியும் அபிஷேக் சர்மாவை அவுட் ஆக்கலாம்

என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com