ஆப்கானிஸ்தான் வீரர் நபிக்கு அபராதம்

முகமது நபிக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதத்தை அபராதமாக ஐ.சி.சி. விதித்துள்ளது
ஆப்கானிஸ்தான் வீரர் நபிக்கு அபராதம்
Published on

துபாய்,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின் போது ஆப்கானிஸ்தான் பேட்ஸ் மேன் முகமது நபி, தென்ஆப்பிரிக்க பவுலர் லுங்கி இங்கிடி கையில் அணிந்திருந்த வெள்ளை நிற பட்டையை அகற்றும்படி வாக்குவாதம் செய்தார். இதனால் அவரது பந்து வீச்சை சரியாக கவனிக்க முடியவில்லை என்று வாதிட்டார்.

அதற்கு இங்கிடி சம்மதிக்கவில்லை. அவ்வாறு கையில் பட்டை அணிவது விதிமீறல் இல்லை என்று கூறிய நடுவர்கள் நபியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் சிறிது நேரம் நபி தனது போக்கில் இருந்து மாறவில்லை. இந்த நிலையில் நடுவரின் அறிவுரையை கேட்டு நடக்காத முகமது நபிக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதத்தை அபராதமாக ஐ.சி.சி. விதித்துள்ளது மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com