ஆஷஸ் 3வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிராகாசமாக உள்ளது.
ஆஷஸ் 3வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
Published on

 அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஸ்டார்க் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் 83 ரன்களில் வெளியேறினார். ஆர்ச்சர் அரைசதமடித்தார்.

இதனால் 85 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. .ஆஸ்திரேலியா சார்பில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார். மேலும் அலெக்ஸ் கேரி அரைசதமடித்தார். ஹெட் 142 ரன்கள், கேரி 52 ரன்கள் எடுத்து இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது.ஹெட் , கேரி இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தனர். கேரி 72 ரன்களில் வெளியேறினார். ஹெட் 172 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 349 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து 435 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது.

தொடக்கம் முதல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பென் டக்கெட் 4 ரன்கள் , ஆலி போப் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோ ரூட் 39 ரன்களிலும் , ஹாரி புரூக் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டோக்ஸ் ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஜாக் கிராலி மட்டும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதமடித்து 85 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 4வது நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 2 ரன்களும், வில் ஜாக்ஸ் 11 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்த வேண்டும் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிராகாசமாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com