ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
Published on

கொல்கத்தா,

ஆசிய கோப்பை தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் இணைந்து விளையாடும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால், அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளனர். மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லுமா என்பதை பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

மேலும் முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியில் இருந்து விரைவில் இந்திய அணி நிச்சயமாக மீண்டு வரும். பாகிஸ்தானுடன் பெதுவான நாட்டில் விளையாடுவதில் இந்தியாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனவே துபாயில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் நிச்சயம் விளையாடும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com