ஆசிய கோப்பை: 3-வது முறையாக மோதும் இந்தியா - பாகிஸ்தான் - சல்மான் ஆஹா கூறியது என்ன..?

image courtesy:PTI
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. முன்னதாக நடப்பு தொடரில் இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது. எனவே 3-வது முறையாக இவ்விரு அணிகளும் மீண்டும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியாவை எப்படியாவது தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலையுடன் பாகிஸ்தான் ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா அளித்த பேட்டியில், “எங்களிடம் எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய அளவுக்கு போதுமான திறன் படைத்த அணி இருக்கிறது. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் அவர்களை (இந்தியா) மீண்டும் சந்திக்கிறோம். வலிமையாக மீண்டெழுந்து அவர்களை தோற்கடிக்க முயற்சிப்போம்” என்று கூறினார்.






