

கொல்கத்தா,
ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் சி பிரிவில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து இடையே கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் போட்டி ஒன்று இன்று நடந்தது.
இதில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் (2458), அலெக்ஸ் ஹேல்ஸ் (2074), டேவிட் மலான் (1892) மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் (1671) ஆகியோர் உள்ளனர்.
இதேபோன்று, டி20 போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய 5-வது வீரர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அயர்லாந்து நாட்டின் பால் ஸ்டிர்லிங் (163), இந்தியாவின் ரோகித் சர்மா (159), அயர்லாந்தின் ஜார்ஜ் டாக்ரெல் (157) மற்றும் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (150) ஆகியோர் உள்னர்.
சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் வலது கை பேட்ஸ்மேனான பட்லர், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 991 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.