டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான்.. குவியும் வாழ்த்துக்கள்

இம்ரான் கான், ஏபி டிவில்லியர்ஸ் உட்பட பலரும் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Image Tweeted By TheRealPCB
Image Tweeted By TheRealPCB
Published on

சிட்னி,

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் நுழைவது இது மூன்றாவது முறையாகும். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், "சிறப்பான வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி மற்றும் பாபர் அசாமுக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீர்ர் இர்பான் பதான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சரிவில் இருந்து மீண்டு இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பயணம் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸும் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com