நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? சுப்மன் கில் பதில்

image courtesy:PTI
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்மன் கில்லிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
துபாய்,
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அண்மையில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக முதலிடத்தை பிடித்ததோடு பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார். அதனால் அவரை தொடர் நாயகனாக இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தேர்வு செய்தார்.
இந்த தொடருக்கு முன்னதாக பல வித விமர்சனங்களை சந்தித்த அவர் அவை அனைத்திற்கும் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்தார். தற்போது ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அதில் அவரிடம், இதுவரை நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்மன் கில், ‘ஜேம்ஸ் ஆண்டர்சன்’ என கூறினார்.






