டி20 உலகக் கோப்பையில் இந்தியா வரலாறு படைக்கும் - தோனி நம்பிக்கை

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வரலாறு படைக்கும் என தோனி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா வரலாறு படைக்கும் -  தோனி நம்பிக்கை
Published on

மும்பை,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர்பாக பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியதாவது,

இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் தற்போதைய டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் ஒன்று. 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வரலாறு படைக்கும். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com