டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
Published on

கொல்கத்தா,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இத்தாலி மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். இத்தாலி தரப்பில் அந்த அணியின் கிராண்ட் ஸ்டிவார்ட், கிறிஷன் கல்கமெஜ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தின.

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இத்தாலி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இத்தாலியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இத்தாலி தரப்பில் அந்த அணியின் பென் மனெந்தி அதிகபட்சமாக 25 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஜேமி ஓவர்டர், சாம் கரன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com