ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் சென்னை வந்தார்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தனது முதல் 5 லீக் ஆட்டங்களை சென்னையில் விளையாடுகிறது.
ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் சென்னை வந்தார்
Published on

அந்த அணி தொடக்க லீக் ஆட்டத்தில் வருகிற 11-ந் தேதி கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள இந்திய வீரர்கள் சென்னை வந்து விட்டனர். வெளிநாட்டு வீரர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), உதவி பயிற்சியாளர் பிராட் ஹேடின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். ஐ.பி.எல். விதிமுறைப்படி ஒவ்வொருவரும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தான் அணியினருடன் இணைய முடியும். இதன்படி வார்னர், வில்லியம்சன், பிராட் ஹேடின் ஆகியோர் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து பவுலர்களான டிரென்ட் பவுல்ட், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம் ஆகியோரும் நேற்று சென்னை வந்து ஓட்டலில் தங்களது தனிமைப்படுத்துதலை தொடங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com