டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
Published on

அகமதாபாத்,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.

டி20 உலகக்கோப்பையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 36வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் ஷிவம் துபெ அதிரடியாக ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்னும், திலக் வர்மா 31 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.நெதர்லாந்து சார்பில் வான் பீக் 3 விக்கெட்டும், ஆர்யன் தத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. பாஸ் டி லீட் 33 ரன்னும், ஜாக் லயன் 26 ரன்னும், மைக்கேல் லெவிட் 24 ரன்னும் எடுத்தனர்.இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ஷிவம் துபெ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 4வது வெற்றியைப் பதிவு செய்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com