கேரளா: பத்மநாபசுவாமி கோவிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சாமி தரிசனம்

கடைசி டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
கேரளா: பத்மநாபசுவாமி கோவிலில்  இந்திய கிரிக்கெட் அணி  வீரர்கள் சாமி தரிசனம்
Published on

திருவனந்தபுரம்,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளில் இந்தியாவும், 1 போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க இரு அணி வீரர்களும் கேரளா வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். வருண் சக்ரவர்த்தி , சூர்யகுமார், அக்சர் பட்டேல், ரிங்கு சிங், குல்தீப் உள்பட 7 வீரர்கள் கோவில் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com