இரானி கோப்பை, ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்தியா ஏ, ரெஸ்ட் ஆப் இந்திய அணி அறிவிப்பு


இரானி கோப்பை, ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்தியா ஏ, ரெஸ்ட் ஆப் இந்திய அணி அறிவிப்பு
x

image courtesy:PTI

இரானி கோப்பை போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்திய அணியின் துணை கேப்டனாக கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்தியாவின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2024 - 25 ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான அந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அந்த அணியில் இஷான் கிஷன், அபிமன்யு ஈஸ்வரன், கலீல் அகமது, ஆகாஷ் தீப் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆப் இந்தியா அணி : ரஜத் படிதார் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஆர்யன் ஜுயல், ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யாஷ் துல், ஷேக் ரஷீத், இஷான் கிஷன், தனுஷ் கோட்டியான், மானவ் சுதர், குர்னூர் பிரார், கலீல் அகமது, ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், சரன்ஷ் ஜெய்ன்.

குறிப்பு: இந்திய முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட்) இருந்து ஆறு மாத இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளார். எனவே அவரது முடிவைக் கருத்தில் கொண்டு, இரானி கோப்பைக்கான தேர்வுக்கு அவர் பரிசீலிக்கப்படவில்லை.

அத்துடன் ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ஏ அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், ஆயுஷ் படோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சிமர்ஜீத் சிங்.

2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், ஆயுஷ் படோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி நடைபெற உள்ளது.

1 More update

Next Story