

சென்னை,
சர்வதேச டி20யில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற ரோகித்தின் சாதனையை அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் முறியடித்துள்ளார்.
கேப்டன்சி முதல் பேட்டிங் வரை, சாதனைகள் பற்றி பேசும்போதெல்லாம, ரோகித் சர்மாவின் பெயர் எதிரொலிக்கும். அந்த அளவுக்கு பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரோகித் சர்மா.
இருப்பினும், இப்போது அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங், ரோகித் சர்மாவின் மிகப்பெரிய உலக சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டி20யில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக இருந்த ரோகித் சர்மாவை பவுல் முந்தியுள்ளார் .
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களம் இறங்கியபோது , இந்த வரலாற்றைப் படைத்தார். பால் ஸ்டிர்லிங் தனது வாழ்க்கையில் 160 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் . முன்னதாக, இந்த சாதனை ரோகித் சர்மாவிடம் இருந்தது, அவர் 159 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார் .
2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு "ரோகித் சர்மா" டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் . இப்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. பால் ஸ்டிர்லிங் மற்றும் ரோஹித் சர்மாவைத் தவிர, 150க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் ஜார்ஜ் டாக்ரெல் ஆவார். அவர் இதுவரை அயர்லாந்துக்காக 153 போட்டிகளில் விளையாடியுள்ளார் .