பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மா விளையாடமாட்டார் என தகவல் வெளியானது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா
Published on

கொழும்பு,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் அபிஷேக் சர்மா விளையாடமாட்டார் என தகவல் வெளியானது.

தற்போது அபிஷேக் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com