சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் - இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை


சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் - இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 4 Aug 2025 10:30 AM IST (Updated: 4 Aug 2025 11:57 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது.

ஓவல்,

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.

இங்கிலாந்தின் 2-வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அதாவது தங்களது சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதம் விளாசியவர்கள் பட்டியலில் 24 சதங்களுடன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இந்த பட்டியலில் பாண்டிங் (ஆஸ்திரேலியா), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஜெயவர்தனே (இலங்கை) ஆகியோர் தங்களது சொந்த மண்ணில் 23 டெஸ்ட் சதங்களை விளாசி 2-ம் இடத்தில உள்ளனர்.

1 More update

Next Story