இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய முன்னணி வீரர் விலகல்

image courtesy:ICC
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
மெல்போர்ன்,
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய முன்னணி ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வலைப்பயிற்சியின் போது கேமரூன் க்ரீன் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மார்னஸ் லபுஸ்சேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






