ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது

நியூசிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது
Published on

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் இந்த தொடரில் ஆடவில்லை. துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த இருக்கிறார். அதே சமயம் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, முழுமையான அணியாக களம் இறங்குகிறது. சொந்த மண்ணில் ஆடுவது நியூசிலாந்துக்கு சாதகமான அம்சமாகும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நீல் புரூம், காலின் முன்ரோ, ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, மேட் ஹென்றி அல்லது லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்,

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), ஜேம்ஸ் பவுல்க்னெர், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com