

சென்னை,
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக . மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்த நிலையில், டி20 உலக கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பாக முன்னாள் வீரர் ஆர்.அஸ்வின் கூறியதாவது,
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும். அடுத்த 4 அல்லது 5 தினங்களில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கிறேன். நானும் இந்தப்போட்டியை பார்க்க விரும்புகிறேன் .
பாகிஸ்தான் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். ஒளிபரப்பு நிறுவனம் பெரும் தொகையை இழப்பார்கள். எனவே ஒரு சமரசம் ஏற்பட்டாக வேண்டும். ஐ.சி.சி.யின் அனைத்து உறுப்பினர்களும் இழப்புகளை சந்திப்பார்கள். பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு ஐ.சி.சி. தடை விதிக்கலாம்.ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக விளையாடமாட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.