ரஞ்சி கிரிக்கெட்: ஜம்மு-காஷ்மீர் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி

ரஞ்சி கிரிக்கெட்டில் 67 ஆண்டுகளில் முதல்முறையாக ஐம்மு-காஷ்மீர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
ரஞ்சி கிரிக்கெட்:  ஜம்மு-காஷ்மீர் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி
Published on

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட் டது. இதில் மேற்கு வங்காள மாநிலம் கல்யாணியில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான பெங்கால் அணி, ஜம்மு-காஷ்மீரை சந்தித்தது. முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் 328 ரன்னும், ஜம்மு-காஷ்மீர் 302 ரன்னும் எடுத்தன. 26 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 99 ரன்னில் சுருண்டது. இதைத்தொ டர்ந்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஜம்மு-காஷ்மீர் அணி 67 ஆண்டுகளில் இறுதிப்போட்டியை எட்டுவது இதுவே முதல்முறையாகும். வன்ஷாஜ் ஷர்மா 43 ரன்களுடனும், அப்துல் சமத் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

லக்னோவில் நடந்து வரும் கர்நாடகா-உத்தரகாண்ட் இடையிலான மற்றொரு அரைஇறுதியில் முதல் இன்னிங்சில் கர்நாடக அணி 736 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தரகாண்ட் முந்தைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

503 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்து மொத்தம் 802 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் கர்நாடக அணி இறுதி சுற்றுக்குள் நுழைவது உறுதியாகி விட்டது. ரவிச்சந்திரன் சம்ரன் 127 ரன்கள் (149 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்து அவுட் ஆனார். லோகேஷ் ராகுல் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com