

ஐதராபாத்,
ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதியில் கர்நாடகா- உத்தரகாண்ட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 736 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 232 ரன்களும் கே.எல். ராகுல் 141 ரன்களும் ரவிச்சந்திரன் ஸ்மரன்135 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 503 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய கர்நாடக அணி 323 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதை தொடர்ந்து 763 ரன்கள் இலக்குடன் விளையாடி வந்த உத்தரகாண்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் அடித்த நிலையில் போட்டி டிரா ஆனது.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் அடிப்படையில் கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கர்நாடக அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. வரும் 24ம் தேதி ஹூப்ளியில் நடக்க உள்ள இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் கர்நாடகா பலப்பரீட்சை நடத்துகிறது.