

சிட்னி,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 , ஒருநாள், டெஸ்ட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் சோபி மோலினக்ஸ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக அலிசா ஹீலி தொடருகிறார். மார்ச் மாதம் நடக்கும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் இருந்து அனைத்து வடிவிலான போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக சோபி மோலினக்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.