டி20 உலகக் கோப்பை: பந்துவீச்சில் மிரட்டும் அமெரிக்கா...இந்திய அணி தடுமாற்றம்

அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
டி20 உலகக் கோப்பை:  பந்துவீச்சில் மிரட்டும் அமெரிக்கா...இந்திய அணி தடுமாற்றம்
Published on

மும்பை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் இன்று நடைபெறும் 3வது ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளும் விளையாட உள்ளன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் அமெரிக்கா அணியின் சிறப்பான பந்த்துவீச்சால் இஷான் கிஷான் 20 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் , ஷிவம் துபே டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com