டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
Published on

பல்லேகல்லே,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொழுபுவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்ஐ - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான மிட்சேல் மார்ஷ் மற்றும் ஹெட் அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், மார்ஷ் 54 ரன்னிலும், ஹெட் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கிரீன் (3), டிம் டேவிட் (6) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும், ஜோஸ் இங்கிலீசும், மேக்ஸ்வெல்லும் இணைக்கு அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் தசுன் ஹேமந்தா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com