டி20 உலகக் கோப்பை: பீட்சா தயாரிக்கும் வேலையை விட்டு வந்த இத்தாலி வீரர்

டி20 உலக கோப்பையில் விளையாடி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டி20 உலகக் கோப்பை: பீட்சா தயாரிக்கும் வேலையை விட்டு வந்த இத்தாலி வீரர்
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 17வது ஆட்டத்தில் நேபாளம் - இத்தாலி அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மேனின்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

நேபாளம் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 124 ரன்கள் இலக்குடன் இத்தாலி அணி விளையாடியது.12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இத்தாலி வெற்றி பெற்றது. இது இத்தாலி அணிக்கு முதல் உலகக் கோப்பை தொடராகும். அதன்படி உலகக் கோப்பை தொடரில் இத்தாலி பெற்ற முதல் வரலாற்று வெற்றியாகும்.

இந்நிலையில், இத்தாலியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் க்ரிஷன் கலுகமாகே பீட்சா தயாரிக்கும் வேலையை விட்டு விட்டு தற்போது டி20 உலக கோப்பையில் விளையாடி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பேசிய க்ரிஷன் கலுகமாகே, "தற்போது கிரிக்கெட்டுடன் அந்த வேலையில் கவனம் செலுத்தினாலும், வருங்காலத்தில் கிரிக்கெட் மட்டுமே விளையாட வேண்டும் என என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com