டி20 உலகக் கோப்பை - ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த நேபாள அணி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை நேபாள அணி பதிவு செய்தது.
டி20 உலகக் கோப்பை - ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த நேபாள அணி
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், 33-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் அங்கம் வகித்துள்ள ஸ்காட்லாந்து - நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான மிட்சேல் ஜோன்ஸ் அதிகபட்சமாக 71 ரன்கள் விளாசினார். நேபாளம் தரப்பில் சொம்பால் கமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களம் இறங்கியது.

தொடக்க வீரரான குஷால் புர்டெல் 35 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். ஷேக் 27 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பவுடல் 16 ரன்னில் வெளியேறினார். திபேந்திர சிங் ஐரீ உடன் குல்சன் ஷா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐரீ 23 பந்தில் 50 ரன்களும், குல்சன் ஜா 17 பந்தில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் நேபாளம் 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் தொடரை நேபாளம் நிறைவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com