

மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ளன. இதற்கிடையே, சூப்பர் 8 சுற்றுக்கு தற்போது வரை 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், 33-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் அங்கம் வகித்துள்ள ஸ்காட்லாந்து - நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான மிட்சேல் ஜோன்ஸ் அதிகபட்சமாக 71 ரன்கள் விளாசினார். நேபாளம் தரப்பில் சொம்பால் கமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி பேட்டிங் செய்து வருகிறது.
ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தகக்து.