

துபாய்,
7-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவ்ஃப் வீசிய பந்தால் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலுக்கு கால் பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
ஏற்கனவே, கடந்த செவ்வாய்க்கிழமையன்று கால் தசை நார் கிழிவால் ஏற்பட்ட காயம் காரணமாக லாக்கி பெர்குசன் விலகி உள்ளார். இந்நிலையில், கப்திலுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரும் இடியாக நியூசிலாந்து அணிக்கு அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தை சமாளிக்குமா வங்காளதேசம்