டி20 உலகக் கோப்பை: தனி ஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்...இந்தியா 161 ரன்கள் சேர்ப்பு

அமெரிக்கா அணியில் ஷாட்லி வான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டி20 உலகக் கோப்பை: தனி ஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்...இந்தியா 161  ரன்கள் சேர்ப்பு
Published on

மும்பை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் இன்று நடைபெறும் 3வது ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளும் விளையாடுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் அமெரிக்கா அணியின் சிறப்பான பந்த்துவீச்சால் இஷான் கிஷான் 20 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் , ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.

பின்னர் ரிங்கு சிங் , ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . மறுபுறம் சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்து அசத்தினார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்தார். அமெரிக்கா அணியில் ஷாட்லி வான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com