டி20 உலகக் கோப்பை: கனடாவை வீழ்த்தி யுஏஇ வெற்றி

யுஏஇ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை:  கனடாவை வீழ்த்தி யுஏஇ வெற்றி
Published on

யுஏஇ அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யஷ் சர்மா, கேப்டன் வசீம் ஆகியோர் களமிறங்கினர். இதில் வசீம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

இந்நிலையில் ஆர்யஷ் உடன் ஷோயப் கான் ஜோடி பொறுப்புடன் விளையாடிய ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்

இறுதிவரை போராடிய இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். யுஏஇ அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புதுடெல்லி,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம், கனடா அணிகள் மோதின . டெல்லியில் நடைபெறும் இந்த லீக் ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது.

இதில் டாஸ் வென்ற கனடா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிலைத்து ஆடிய ஹார்ஸ் தக்கர் அரைசதமடித்தார். நவநீத் தலீவால் 34 ரன்கள் எடுத்தார். யுஏஇ அணியில் ஜுனைத் சித்திக் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 151 ரன்கள் இலக்குடன் யுஏஇ அணி விளையாடியது.

யுஏஇ அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யஷ் சர்மா, கேப்டன் வசீம் ஆகியோர் களமிறங்கினர். இதில் வசீம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

இந்நிலையில் ஆர்யஷ் உடன் ஷோயப் கான் ஜோடி பொறுப்புடன் விளையாடிய ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்

இறுதிவரை போராடிய இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். யுஏஇ அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com