டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்திய அணி 240 ரன்கள் குவிப்பு

இஷான் கிஷான் அரைசதம் அடித்தார்.

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் :  இந்திய அணி 240 ரன்கள் குவிப்பு
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய அணி வீரர்கள் வான வேடிக்கை காட்டினர்.

இஷான் கிஷான் அரைசதம் அடித்தார். அபிஷேக் சர்மா 24 ரன்கள் , திலக் வர்மா 45 ரன்கள் , அக்சர் படேல் 35 ரன்கள் எடுத்தனர்.இறுதியில் இந்திய அணி 240 ரன்கள் குவித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com