உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்
Published on

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில் இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் பலரும் அழுத நிகழ்வு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com