இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் ?

ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து பேசியது.
இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் ?
Published on

சென்னை ,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக . மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது.இதனால் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முடிவு தெரியாமல் இருந்து வந்தது.

ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து பேசியது. இந்த நிலையில், இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் 15ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com