பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்குவீர்களா? - சூர்யகுமார் யாதவ் விளக்கம்

27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன.
பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்குவீர்களா?  - சூர்யகுமார்  யாதவ் விளக்கம்
Published on

கொழும்பு,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள். பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்தது.

இந்தியாவுடன் விளையாட முதலில் மறுத்து பின்னர் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

நாளைய ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்குவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது,

24 மணி நேரம் காத்திருங்கள். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். அதன்பின் இது குறித்து முடிவு செய்வோம். நீங்கள் நன்றாக தூங்குங்கள்.நன்றாக சாப்பிடுங்கள். 24 மணி நேரம் காத்திருங்கள். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com