

வதோதரா,
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.
இதில் இன்று நடைபெறும் 20-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- உ.பி.வாரியர்ஸ் (இரவு 7.30 மணி) மோதுகின்றன. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றால் 3-வது அணியாக பிளே-ஆப் சுற்றை எட்டும். தோற்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாய்ப்பு கிட்டும்.