மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
Published on

வதோதரா,

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இதில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

டெல்லி அணி:

லிசெல் லீ, ஷபாலி வர்மா, லாரா வால்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் காப், சினெல்லே ஹென்றி, நிகி பிரசாத், சினே ராணா, மின்னு மணி, ஸ்ரீ சரணி, நந்தனி ஷர்மா.

பெங்களூரு அணி :

கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா, ஜார்ஜியா வோல், ரிச்சா கோஷ், ராதா யாதவ், நாடின் டி கிளர்க், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, சயாலி சத்கரே, ஷ்ரேயங்கா பாட்டீல், லாரன் பெல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com